News Update :

Saturday, 16 March 2013

பீட்சாவுக்காக துப்பாக்கி முனையில் மாணவிகள்


ரஷியாவின் அஸ்ட்ராகான் நகரில் ஒரு பெண்கள் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் ஒரு நபர் புகுந்தான். மேலும் அவன் வெடிபொருட்களும் வைத்திருந்தான்.
திடீரென ஒரு வகுப்பறைக்குள் புகுந்த அவன் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 4 பேரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தான்.

தகவல் அறிந்ததும், பொலிசார் விரைந்து வந்து அவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவன் தனக்கு பீட்சாவும், குளிர்பானமும் வேண்டும் என கோரிக்கை விடுத்தான்.
இந்த சாதாரண கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போலீசார் அவன் கேட்டபடி பீட்சாவும், குளிர்பானமும் கொடுத்தனர். இதையடுத்து அவன் சிறைபிடித்து வைத்திருந்த 4 பேரையும் விடுவித்தான்.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.