News Update :

Monday, 18 March 2013

பிரச்சினையைத் தீர்க்க வந்த 33 வயது பெண்ணுடன் தனிக்குடித்தனம் சென்ற 16 வயது மாணவன்


விக்கி கலகன் என்ற 33 வயதுப் பெண் அமெரிக்காவில் ஒரு தனியார் சிறப்புப் பள்ளியில் பிரச்சனைகள், குழப்பங்கள் உடைய மாணவர்களுக்கு மனநல ஆலோசகராகப் பணி புரிந்து வந்தார். அவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகளும் உண்டு.

இந்தப் பள்ளிக்கு டிஸ்லெக்சியா குறைபாடு உடைய 16 வயது மாணவன் ஒருவனை அவனுடைய தாயார் அழைத்து வந்தார். கோபத்தால் உண்டாகும் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டி தன் மகனை இந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டு சென்றார். மனநல ஆலோசகராக அவனுக்கு உதவி புரியவந்த கலகனும் அந்த மாணவனும் வெகு விரைவிலேயே நெருக்கமாகப் பழகத்துவங்கினர்.
அடிக்கடி அவர்கள் இருவரையும் ஒன்றாக வெளியிடங்களில் பார்த்தபோது, அவர்களுடைய தொடர்பு ஊர்ஜிதம் ஆனது. தனது வேலையை ராஜினாமா செய்த கலகன், அந்த மாணவனுடன் தனிக் குடித்தனம் துவங்கிவிட்டார். கோபமுற்ற மாணவனின் தாயோ பள்ளியின் பொறுப்பாளர்களைத்தான் திட்டித் தீர்க்க முடிந்தது.
இது முறையற்றது என்ற போதிலும் அவர்கள் இருவரும் சகஜமாக இருக்கின்றனர் என்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து புலனாய்வு செய்யும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இது தான் காதல்-
    இதை தவறாக புரிந்து கொள்ள முடியாது-
    மாறாக-
    ஒரு மனதை இன்னொரு மனம் அறிந்து உணர்கின்றது-

    காதல்-
    உணரும் உணர்ச்சிகளுக்கு காதலர்களாகவும் தாயாகவும் தந்தையாகவும் நண்பர்களாகவும் சகோதரத்துவமாக உருப்பெறும்.!!!

    ReplyDelete

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.