ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலி(Mali) பழங்குடியினர் செறிந்து வாழும் நாடாக திகழ்கிறது. இவர்கள் ஆண்டுதோறும் வினோதமான மீன்பிடித் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
எட்டுத்திக்கிலும் கடலே கிடையாது. ஆனாலும் பம்பா (Bamba) எனும் கிராமத்தில் சேரும் சகதியுமாய் நிரம்பிய ஒரு குட்டை காணப்படுகிறது. இங்கு மீன் இருப்பது கடலில் முத்தெடுப்பது போல.
பறவைகள் எல்லாவற்றையும் கொத்திச் சென்று விட எங்கோ ஓரிரு மீன் இருக்கும். அதை பிடிப்பதற்காக ஊரே திரண்டுவரும், மீன்களை பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment