News Update :

Saturday, 16 March 2013

சிறுமியின் மின்னல் வேக கார் சவாரி: அதிர்ச்சியில் பொலிசார்


ரஷ்யாவில் 8 வயது சிறுமி தனது தந்தையின் சொகுசு காரை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்ற வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை சேர்ந்த அனந்தாசியா என்ற சிறுமியின் கார் ஓட்டும் காட்சி பொலிசாரை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சிறுமி தனது பிஞ்சு கைகளில் ஸ்டீரிங்கை பிடித்து ஓட்ட, அருகில் அமர்ந்திருக்கும் தந்தை, ‘இன்னும் வேகமாக செல், ஆக்சிலேட்டரை பலமாக அழுத்து, குறைந்தது 100 கிலோ மீட்டரில் போகலாம்’ என்று கூறுகிறார்.

இதன் விளைவாக கார் கட்டுப்பாட்டை இழந்து ஓட, தந்தை அடிக்கடி அதை சரிசெய்கிறார். இவ்வாறு சிறுமியின் இந்த கார் ஓட்டும் ஸ்டண்டு 15 நிமிடம் ஓடுகிறது.
சிறுமியையும், தந்தையும் வளைத்து பிடிக்க பொலிசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இது அப்பட்டமாக போக்குவரத்து விதிகளை மீறும் செயல். எனவே 2 பேரையும் கண்டுபிடித்து தண்டிப்போம் என பொலிஸ் உயர் அதிகாரி கூறுகிறார்.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.